தமிழக விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் வரும் மார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு எந்த வொரு தமிழ் படமும் ரிலிஸ் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விநியோகஸ்தர்கள் ஒருமனதாக ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன் படி வரும் மார்ச் 27 ஆம் தேதிக்குப் பின் எந்தவொரு புதிய படமும் வாங்கி ரிலிஸ் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
விநியோகஸ்தர்களின் சங்கத்தின் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1.விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும், இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் விதமாக மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரி அல்லாமல் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி விதிக்கிறது. இந்த 8 சதவீத வரியை நீக்கவேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…