தன்னுடைய பேச்சு,செயல் மூலம் பலரையும் கவர்ந்தவர் நித்யானந்தா. அவர் செய்வது தவறு என நினைப்பவர்கள் கூட அவர ரசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். தற்போது வெளிநாட்டில் எங்கேயோ கைலாச நாடு அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண மண்டபத்தின் வெளியே மணமகனின் நண்பர்கள் சிலர் நித்யானந்தாவின் புகைப்படத்தை கொண்ட பேனர் வைத்திருந்தனர். அதில் ‘நோ சூடு நோ சுரணை’ எனவும் குறிப்பிட்டிருந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த பேனரை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த அவர்கள் ‘தற்போது நித்யானந்தாதான் டிரெண்டிங்கில் இருக்கிறார். எனவேதான் அவர் புகைப்படத்தை போட்டு பேனர் வைத்தோம். அவர் மிகவும் வித்தியாசமாக இருப்பது எங்களுக்கு பிடித்துள்ளது. மிக குறுகிய காலத்தில் அவர் வளர்ச்சி அடைந்துள்ளார். அவர் அமைக்கும் கைலாச நாட்டிற்கு செல்ல ஆவலாக இருக்கிறோம். அவர் மிகவும் வெளிப்படையானவர். அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறார்.
குறிப்பாக நோ சூடு நோ சுரணை என அவர்தான் கூறினார். தற்போது சமூகவலைத்தளங்களில் வாலிபர்கள் பலரும் அதைத்தான் பின்பற்றி வருகின்றனர். மேலும், நித்யானந்தா குஜாலான பேர் வழியும் கூட.. எனவே, மக்களை கவரவே அவர் புகைப்படத்தை அச்சடித்து பேனர் வைத்தோம் ‘ எனக் கூறினர்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…