">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரானா நோயாளிகளுக்கு மாஸ்க் அணியாமல் சிகிச்சை ; கதறும் நர்ஸ் : அதிர்ச்சி வீடியோ
சீனாவில் துவங்கிய கொரனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இந்நோய்க்கு சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழதுவிட்டனர்.�
குறிப்பாக அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1480 பேர் பலியாகி விட்டனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த வந்த நர்ஸ் ஒருவர், கொரானாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கும் ஐசியு வார்டில் தான் பணி செய்ய அமர்த்தப்பட்டதாகவும், ஆனால், அங்கு பணிபுரியும் செவிலியர்கள் யாருக்கும் நிர்வாகம் மாஸ்க் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தான் அந்த வேலையை விட்டு விட்டதாகவும் அவர் கதறி அழும் வீடியோ பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. கொரானா சிகிச்சைக்கு அமெரிக்கா இன்னும் தயாராக வில்லை என அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே மருத்துவமனைகளில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
In tears, a nurse says she quit her job after she was asked to work in a coronavirus ICU without a face mask: “America is not prepared, and nurses are not being protected” https://t.co/ywoSuLOPYP pic.twitter.com/S5BsnlO5nt
— CBS News (@CBSNews) April 5, 2020