காருக்குள் காதல் கணவருடன்…. ஏமி ஜாக்சன் வீடியோவால் ஏக்கம் அடைந்த ரசிகர்கள்!
தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருவார்.
இந்நிலையில் தற்ப்போது இத்தாலி நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஏமி ஜாக்சன் அங்குள்ள அழகான இடங்களுக்கு கணவருடன் காரில் அவுட்ங் சென்ற வீடியோ , புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். காதல் கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஏமியை சில சிங்கிள் பசங்க ஏக்கத்தில் பரிதவித்து பாவமாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.