பெண்கள் மட்டுமல்ல… நித்தி என்னையும் விடல!- ஆண் சீடர் பரபரப்பு புகார்

Published On: December 15, 2019
---Advertisement---

749e886d948809bc19f1e2136a1a5f8e-1

பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் குஜராத் மற்றும் கர்நாடக போலீசார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். அவர் வெளிநாட்டில் தங்கி தினம் தினம் வீடியோவை வெளியிட்டு அதில் சர்ச்சையான கருத்துகளை கூறி வருகிறார். இவரின் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரங்கள் செய்யப்படுவதாகவும், ஆண்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், அவரது சீடத்தில் கடந்த 10 வருடங்களாக அவரது ஆஸ்ரமத்தில் பணிபுரிந்து வந்த தஞ்சையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை காவல்துறை அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். 

அதில், நித்தியானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு 2009ம் ஆண்டு அவரது ஆஸ்சிரமத்தில் சேர்ந்தேன். திருவாரூர், நாகை, வேதாரண்யம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மடங்களை நிர்வாகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதுவரை 350 இளைஞர்களை ஆசிரமத்தில் சேர்த்தேன். ஆனால், அங்கு மோசடி நடப்பதை தெரிந்து கொண்டேன். நித்யானந்தா செக்ஸ் வெறியர். என்னை ஓரினச் சேர்க்கைக்கு அவர் அழைத்தார். மாடல் அழகிகளை மயக்கி எனக்கு அனுப்பு எனக்கூறினார். எனவே, ஆசிரமத்தில் இருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment