கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாகினர். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் கமல் 1 கோடி ரூபாயும் லைகா நிறுவனம் 2 கோடி ரூபாயும் நிவாரணம் அளிப்பதாக சொல்லியுள்ளனர்.
இந்நிலையில் இறந்தவர்களுக்கான அஞ்சலி கூட்டம் இன்று ஃபெப்சியால் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்ட டப்பிங் யூனியன் சங்க தலைவர் ராதாரவி ‘இந்த கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்குச் சகோதரர் கமல் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். அவருக்கு என் பாராட்டுகள். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக நாம் படம் எடுப்பதாக சொல்கிறோம். அதே போல பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தித் தரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…