பேச்சில் மட்டுமல்ல! செயலிலும் நிரூபித்த சித்தார்த்…போராட்டத்தில் பங்கேற்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள்  மீது போலீசார் தடியடி நடத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. தற்போது அப்போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. 

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதேபோல், கோவை, திருச்சி என போராட்டம் துவங்கியுள்ளது.
இந்நிலையில்,  இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பேச்சோடு நிற்காமல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Published by
adminram