நம்பர் 1 ரவீந்தரநாத்… கடைசி இடத்தில் அன்புமணி ராமதாஸ் – நாடாளுமன்ற அட்டண்டன்ஸ் !

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகைப்பதிவேடு நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

17 வது மக்களவை தேர்தல் முடிந்த பின்பு இருமுறை நாடாளுமன்ற அவைகள் கூடியுள்ளது. இதில் கலந்துகொண்ட மற்றும் விவாதங்களில் கேள்வி எழுப்பிய அமைச்சர்களின் விவரங்கள், அவ்விரு அவைகளின் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்தமாக மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை விட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை பதிவேடு மிகவும் குறைவாக உள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் 15 சதவீதத்துக்கும் குறைவான நாட்களே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். இரு விவாதங்களில் கலந்து கொண்ட அவர், எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. மேலும் எந்த ஒரு தனி நபர் மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை. தமிழகத்திலிருந்து சென்ற இதழில் இவரது செயல்பாடு தான் மிகவும் மோசமாக உள்ளது. அதேநேரத்தில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் சென்றுள்ள அதிமுகவைச் சேர்ந்த ஓ பி இரவீந்திரநாத் 79% நாட்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார். அதேசமயம் 42 விவாதங்களில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
adminram