ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதிகம் படிப்பறிவில்லாத, விபரம் தெரியாதவர்களின் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
எனவே, ஸ்டேட் பேங்க் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணமெடுத்தால் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி எண் வரும். அதை ஏ.டி.எம் எந்திரத்தில் செலுத்தினால் மட்டுமே பணம் வெளியே வரும். இதன் மூலம், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளையடிப்பது தடுக்கப்படும் என ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. இந்த வசதி ஜனவரி 1ம் தேதி முதல் அமூலுக்கு வருகிறது.
அதேநேரம், இந்த பாதுகாப்பு அம்சம் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையங்களில் மட்டுமே செயல்படும். மற்ற வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால், போகப்போக அனைத்து வங்கிகளும் இந்த வசதியை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…