அஜித் நடித்து வரும் வலிமை படத்தை நேரடியாக ஓடிடி ப்ளாட்பார்மில் ரிலீஸ் செய்ய அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீஸாகாமல் முடங்கியுள்ளன. இதனால் தமிழ் சினிமாவில் மட்டும் 600 கோடி ரூபாய் முடங்கியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் திரையரங்குகளுக்காக மாற்றாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர். அந்த வகையில் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு படங்களை கைப்பற்ற முயன்று வருகின்றன.
ஏற்கனவே அமேசான் நிறுவனம் மாஸ்டர் திரைப்படத்தை வாங்க முயன்று அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் இப்போது அஜித்தின் வலிமை படத்தையாவது வாங்க வேண்டும் என மும்முரமாக இறங்கியுள்ளது அமேசான் ப்ரைம் நிறுவனம். ஆனால் பாதி மட்டுமே படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வலிமை படக்குழு இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அஜித் இதற்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…