வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

2a32d3f7be86205b91fe5d7b41cd92ff

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் எது என்பது குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தன

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூரி நாயகனாக நடிக்க இருப்பதாகவும், சூர்யா நடிக்க இருப்பதாகவும், விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது வெற்றிமாறன் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சற்று முன்னர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும், சூர்யா-வெற்றிமாறன் முதல்முறையாக இணைய இருப்பதாகவும் அசுரன் படத்தை அடுத்து மீண்டும் தனது நிறுவனம் வெற்றிமாறன் இயக்கும் படத்தை தயாரிக்க ஏற்பதாகவும் அறிவித்துள்ளார்

எனவே சூரியா-வெற்றிமாறன் இணைப்பு என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி சூர்யா40 என்ற ஹேஷ்டேக் தற்போது டுவிட்டரில் டிரெண்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story