அட இப்பவாவது இது நடந்துச்சே! பிரசாந்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

அதோடு, சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் திரைக்கதை  உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை பெற்றது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமை நடிகர் பிரசாந்த் பெற்றுள்ளார். 

ஜெயம் ரவியை வைத்து தெலுங்கு ரீமேக் படங்களை தமிழில் இயக்கி வெற்றிகளை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜா. எனவே, அந்தா தூன் தமிழ் ரீமேக்கை அவர் இயக்கினால் சரியாக இருக்கும் என பிரசாந்த் தரப்பு கருதுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் தமிழ் உரிமையை பெற்ற தனுஷ், சித்தார்த் உள்ளிட்ட பலரும் கடும் முயற்சி செய்தனர். ஆனால், அதிக விலை கொடுத்து பிரசாந்த் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram