சூரியனில் ஓம் ஓசை…. வீடியோ வெளியிட்ட கிரண்பேடி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்
புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
பாஜக ஆதரவாளரான கிரண்பேடி தற்போது புதுச்சேரி துணை ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சூரியனில் ஓம் எனும் மந்திரம் ஒலிப்பதை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர் எனக்கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதைக்கண்டதும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி பதிவுகளை செய்து வருகின்றனர்.
அது கிராபிக்ஸ் செய்யப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், ஆளுனர் கிரண் பேடிக்கு தெரியவில்லையேயே என பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
Once upon a time this lady was a hero to many. What a disgrace now!
— Syed Usman (@Sydusm) January 4, 2020
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்