கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கோடி – அசரடித்த மாற்றுத்திறனாளி!

கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருக்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நாகர்கோயிலைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண் ஒரு கோடி ரூபாயை வென்று அசத்தியுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் முதல் முறையாக 15 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார்.

காது கேட்காத வாய் பேசாத முடியாத கௌசல்யா என்ற அந்த பெண் அசைவுகளின் அனைத்துக் கேள்விகளும் விடையளித்துள்ளார். நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் இவர் அடுத்ததாக குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வரவேண்டும் எனத் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

Published by
adminram