இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றது பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
ஐபிஎல் 2020 தொடருக்காக் சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.தோனியின் இந்த முடிவை அடுத்து பலரும் அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனின் தோனி பற்றிய டிவீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது டிவீட்டில் ‘என் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்று தோனியை சந்திப்பது. மிகவும் சந்தோஷமான மற்றும் திருப்திகரமான தருணம். இதை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி. ஒரு நாள் இவர் இந்தியாவை வழிநடத்துவதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே தோனியை பாஜக பக்கம் இழுக்க அதன் தலைவர்கள் முயல்வதாக சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…