மகாராஜா பட இயக்குனரை கேள்வி கேட்டு திணறடித்த விநியோகஸ்தர்... மனுஷன் புத்தியைப் பாருங்க...!
நான் லீனியர் ஸ்டோரி முறைப்படி கதை சொல்வதில் பல கைதேர்ந்த இயக்குனர்கள் இருக்கிறார்கள். அதாவது கதையை நேரடியாகச் சொல்லாமல் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியாது. கடைசியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ப்பார்கள். அவர் சொல்றதும் நியாயம் தானேன்னு நமக்குத் தோணும்.
அப்படி கதை சொல்லும் இயக்குனர்களில் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், இளம் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் நித்திலன் சுவாமிநாதன். இவர் எடுத்த குரங்கு பொம்மை, மகாராஜா என இரு படங்களுமே இந்த முறையில் வெளிவந்தவை தான். மகாராஜா படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை பிரபல தயாரிப்பாளர் சித்ராலட்சுமணனிடம் நித்திலன் இப்படி சொல்கிறார்.
படத்தோட தயாரிப்பாளருக்கு என் மீது ரொம்ப நம்பிக்கை. என்னோட கதை முழுவதும் அவருக்கு நல்லா தெரியும். நானே சில இடத்தில பதட்டப்பட்டாலும் உனக்கான இடம் பெரிசா இருக்குன்னு என்னை மோல்டு பண்ணிக் கொண்டு வந்தார். கதை கேட்டு பொறுமையாக எனக்கு ஊக்கப்படுத்தியவர் விஜய் சேதுபதி அண்ணா. அவருக்கு முதல் நாளில் கதையே சொல்லவில்லை. சாதாரணமாகப் பேசினோம்.
அடுத்த நாள் பாதி கதை சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. மறுநாள் பாதியை சொன்னதும் திரும்ப அடுத்தடுத்த நாள்கள் வேறு வேறு ஆள்களை உடன் அழைத்து வந்தார். அப்போதும் கதை சொல்ல எல்லாருக்கும் பிடித்து விட்டது. சிங்கம்புலி கேரக்டருக்கு ஏற்கனவே 3 பேரை மனசுக்குள் வச்சிருந்தேன். தொப்பி பட ஆடியோ லாஞ்சில் அவர் பேசின வீடியோ எனக்குப் பிடிச்சிருந்தது. அப்புறம் அவரைக் கூப்பிட்டு பேசி அவருக்கிட்ட ஒரு ஸ்டைலை சொல்லிக் கொடுத்து நடிப்பை வாங்கினேன்.
கன்டன்ட், திரைக்கதை, உடை அலங்காரம், தயாரிப்பாளர், ஹீரோ, வில்லன், டெக்னீசியன், ரிலீஸ் டேட் என எல்லாமே சேர்ந்தது தான் மகாராஜா படத்தோட வெற்றிக்குக் காரணம். வெற்றி என்பது விபத்து தான். இந்தப் படம் அதுக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிடுச்சு. நல்ல படம் எடுத்துருப்போம். கூட வந்த படம் பெரிய படமா இருந்தா நம்ம படம் ஸ்கோர் பண்ண முடியாது. திடீர்னு படம் வரும்போது மழை வந்துடுச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது.
படம் பார்த்துட்டு ஒரு விநியோகஸ்தருக்கு சுத்தமா பிடிக்கல. அவர் முதல் கேள்வி கேட்டாரு. மணிகண்டன் தான் இறந்துட்டானே. எதுக்கு வந்து அவன் திருப்பி வர்றான்? அப்படின்னு கேட்டாரு. மணிகண்டனைத் தான் ஹீரோ வெட்டிட்டாரே. திருப்பி எதுக்கு அவன் வர்றான்னு கேட்டாரு. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.
நீங்க ஹீரோவைக் கையாள்றது சரியில்லன்னு சொல்லிட்டாரு. அவரு ஸ்டைலே கேஷூவலா நடந்து வந்து பேசுவாரு. இதுல பேசவே இல்ல. எனக்குப் பிடிக்கலன்னு சொன்னாரு. சரிங்க சார். இப்படி எடுத்துட்டேன் என்ன பண்ணலாம்னு கேட்டேன். அவரு அப்படியே இருந்துட்டு சரின்னுட்டாரு. மனுசன் புத்தியைப் பாருங்க. பாராட்டைக் கூட மறந்துடுச்சு. நெகடிவ் மட்டும் ஓடிக்கிட்டே இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.