More

அடடடா! வனிதா விஜயக்குமார் வீட்டில் இருந்து இன்னொரு வாரிசு…

கோலிவுட்டில் அதிக நடிகைகளை கொண்டது பழம்பெரும் நடிகர் விஜயகுமார் வீடு தான். அவர் மனைவி மஞ்சுளா, அவரது மகள் வனிதா, ப்ரீதா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரும் நடிகர்கள். முதல் மனைவி மகள் கவிதாவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மகன் அருண் விஜய் சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் மாஸ் காட்டி வருகிறார். 

Advertising
Advertising

இந்நிலையில், அவர் தனது மகன் அர்னவுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் சூர்யா தயாரிக்கும் இந்தப்படத்தை இயக்குநர் சரவ் சண்முகம் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். அருண் விஜயிற்கு இது முக்கிய படமாக கருதப்படுகிறது. முதலில் மகனுக்காக கூட படத்தில் நடித்து விடமாட்டேன். படத்தில் தனது கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என அருண் விஜய் கறார் காட்டி இருக்கிறார். ஆனால், படத்தில் அவரின் கதாபாத்திரம் அவரை வெகுவாக இம்ரஸ் செய்ததால் ஓகே செய்து படப்பிடிப்புகளும் தொடங்கி விட்டதாம்.

Published by
adminram

Recent Posts