சிவகார்த்திகேயன் பட டைட்டிலை அறிவிக்கும் ஆஸ்கார் வின்னர்!

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை இதுவரை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மட்டுமே தயாரித்து வந்த நிலையில் தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த இரு இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை இந்த படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

Published by
adminram