அதில் பேசிய அவர், இந்தி திரையுலகில் தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருக்கிறது. தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் என்னை சந்தித்த போது கூட பலரும் என்னை செல்ல வேண்டாம் என கூறி தடுத்தனர்.
மேலும், ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, என்னிடைய தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தென்னிந்தியர் என்பதால் வட இந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை அங்குள்ள சில கும்பல் விரும்பாமல் அவருக்கு வரும் பட வாய்ப்புகளை கெடுப்பதாக கூறியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற ஆளுமைபடைத்த இசை ஜாம்பவானுக்கே இந்த நிலைமையா…? என பலரும் ரஹ்மானுக்கு ஆதரவாக இந்தி திரையுலகினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் ‘நீங்கள் ஆஸ்கர் வாங்கியதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் பாலிவுட்டை விட அதிக திறமை கொண்டவா் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.’ எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலளித்த ரஹ்மான் ‘பணம் திரும்ப வரும். புகழ் திரும்ப வரும். வாழ்வின் முக்கியமான தருணங்கள் திரும்ப வராது.. அமைதியாக இருங்கள். கடந்து செல்வோம். நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன' எனக் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால் புதுமுகங்களின் நிலைமை என்ன ஆவது..? என அனைவரையும் ஆதங்கத்தில் உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற…
Good bad…
தனுஷ், நயன்தாரா…
Good bad…
பிரபல காமெடி…