காதலரை திருமணம் செய்த ‘ஒஸ்தி’ நடிகை – வைரல் புகைப்படம்

Published On: December 19, 2019
---Advertisement---

f3616c8fdf645e3f4f95d38bf59d53bb

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘மயக்கம் என்ன’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய். அதன்பின், ஒஸ்தி திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார். மேலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அதன்பின் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில், அங்கு ஜோ என்பவரை காதலித்து வருவதாகவும் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் கடந்த ஜனவரி மாதம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ce4558d6af897d54fc5922951124ea9f

இந்நிலையில், அவரின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படை நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Comment