More

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!… அரசு கேபிள் வழியாக வீட்டுக்கு வீடு OTT…

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டது. அதன்பின் நவம்பர் 2020 லிருந்து 2021 பிப்ரவரி மாதம் வரை திரையரங்குகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. மீண்டும் மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டது. தமிழக அரசு பல தளர்வுகள் அறிவித்தும் தியேட்டரை திறக்க அனுமதி தரவில்லை.

Advertising
Advertising

ஒருபக்கம் புதிய திரைப்படங்கள் OTT தளங்களான அமேசான் பிரைம், நெட்பிளிஸ், சோனி, ஹாட் ஸ்டார் தளங்களில் வெளியாகி வருகிறது. மேலும், பல வெப் சீரியர்ஸ்களும் உருவாகி அதில் வெளியிடப்பட்டு வருகிறது. OTT-யில் நீங்கள் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களை பார்த்து மகிழ அரசு கேபிளுக்கு கொடுப்பது போல் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் 6 மாதம், ஒரு வருடம் உள்ளிட்ட பல ஸ்கீம்கள் இருக்கிறது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக (Tamil Nadu Arasu Cable TV chairman) குறிஞ்சி என்.சிவகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஒடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts