சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் இந்த வைரஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களின் மூலமாகவே இந்நோய் அதிகம் பரவுவதால் பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், விமான பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், ரயில் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், பல இடங்களில் அதிகாரிகள் மெத்தனமாக அந்த சோதனையை செய்து வருகின்றனர். இதற்கு ஆதாரமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் செல்போன் பேசிகொண்டே அமர்ந்திருக்கும் அதிகாரி ஒருவர், அங்கு வருபர்கள் சிலரை சோதனை செய்யாமலே அனுப்புவதும், சிலரை சம்பிரதாயத்துக்கு சோதனை செய்யும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன. ஆனால், இந்தியாவின் எந்த மாநிலத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது தெரியவில்லை.
சமூக அக்கறை மற்றும் கடமை உணர்ச்சி இல்லாமல் அந்த அதிகாரி நடந்து கொள்ளும் விதம் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VijayTV: விஜய்…
AR Rahman:…
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…