சீனாவில் சாலையைக் கடக்கும் போது தனது தாயின் மீது மோதிய காரை கோபத்தில் உதைக்கும் சிறுவனின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவின் சான்க்விங்க் என்ற இடத்தில், பெண் ஒருவர் தன் மகனுடன் நடைபாதையில் சாலையைக் கடக்கும் முயலும்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று அந்த பெண்ணின் மேல் மோதுகிறது. இதில் நிலைகுலைந்து அந்த பெண் கீழே விழ சிறுவன் தன் தாயருகில் சென்று அவருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதி செய்துகொண்டு கோபமாக காரை எட்டி உதைக்கிறான்.
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாக சிறுவனின் தாய்ப்பாசம் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது. இதையடுத்து அந்த காரில் ஏற்றி அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ்த்திரை உலகில்…
Actor Ajith:…
Rajinikanth: சூப்பர்ஸ்டார்…
Actor Fahat…
Actor Surya:…