">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வைஃபை காலிங்கிற்கு போட்டியாக ஓவர் வைஃபை காலிங்: தொடரும் ஏர்டெல்-ஜியோ மோதல்
தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின் மற்ற தனியார் தொலைத் தொடர்புத் துறைகளில் நிறுவனங்கள் திணறி வருகின்றன. ஏர்டெல் தவிர மற்ற நிறுவனங்கள் கடும் சிக்கலில் இருப்பதாகவும் ஏர்டெல் மட்டுமே ஜீயோவுக்கு ஈடுகொடுத்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களை காப்பாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது
தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின் மற்ற தனியார் தொலைத் தொடர்புத் துறைகளில் நிறுவனங்கள் திணறி வருகின்றன. ஏர்டெல் தவிர மற்ற நிறுவனங்கள் கடும் சிக்கலில் இருப்பதாகவும் ஏர்டெல் மட்டுமே ஜீயோவுக்கு ஈடுகொடுத்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களை காப்பாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் வைஃபை காலிங் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் நெட்வொர்க் இல்லாத இடத்திலும் ஏர்டெல் சிம்மை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது
ஏர்டெல்லின் இந்த அறிவிப்பை அடுத்து ஜியோ நிறுவனமும் ஓவர் வைஃபை என்ற சேவையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் சிக்கலான பிரச்சனைகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இணைப்பில் இருந்தால் ஓவர் வைஃபை வசதியை பயன்படுத்தி தங்களுக்கு அழைப்பு விடுத்து உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது இந்த சேவை சோதனை முறையில் இருப்பதாகவும் விரைவில் இந்த சேவை பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. முதலில் இந்த சேவை ஜியோ போன்களில் மட்டும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது ஜியோ சிம் வைத்திருக்கும் அனைத்து போன்களுக்கும் இந்த சேவை செயல்படும் வகையில் உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் இந்த போட்டி காரணமாக இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கூடுதல் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது