ஒருதலை காதல்;ஓவரா தொல்லை – பொறுக்காமல் ஆசிட் ஊற்றிய பெண் !

உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை காதலிப்பதாக தொடர் தொல்லைக் கொடுத்து வந்த இளைஞர் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் அருகே பவானி கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோஹித் யாதவ் என்ற 25 வயது இளைஞர். இவர் தன் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதை அந்த பெண்ணிடம் தெரிவித்தும் அந்தப்பெண் அவரைக் காதலிக்க வில்லை என சொல்லியுள்ளார். ஆனாலும் விடாத அந்த இளைஞர் அந்த பெண்ணை தொடர்ந்து தினமும் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனனைப் பின் தொடர்ந்து வந்த அந்த நபரின் மேல் அப்பெண் ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதனால் அந்த இளைஞரின் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
adminram