எலும்பும் தோலுமாக அதிர்ச்சி கொடுத்த ஓவியா!… அதிர்ந்து போன ரசிகர்கள்…..

களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துப்போனது. பலரும் இவரின் நடவடிக்கைகளை பாராட்டினார்கள். ஓவியா ஆர்மி படைகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறி அசிங்கமான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இது தொடர்பான 2 புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ந்து போய் ‘ஏம்மா இப்படி ஆய்ட்டே!.. நல்லா சாப்பிட்டு உடம்பை ஏத்துமா’ என அறிவுரை கூறி வருகின்றனர். 

Published by
adminram