சொன்னது என்னாச்சி?!.. விஜயகாந்த் மகனை டீலில் விட்ட ராகவா லாரன்ஸ்!..

by ராம் சுதன் |

திரையுலகில் உள்ள நடிகர் எல்லோருமே விஜயகாந்தின் மீது அதிக மரியாதையும், அன்பும் கொண்டவர்கள்தான். அதற்கு காரணம் விஜயகாந்த் திரையுலகுக்கும், நடிகர்களுக்கும் செய்த உதவிகள்தான். நடிகராக இருக்கும்போதே பலருக்கும் உணவளித்த விஜயகாந்த், நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டவர்.

அவருக்கு முன்பும், பின்பும் சிலர் நடிகர் சங்க தலைவராக இருந்தாலும் நடிகர் சங்க கடனை அடைத்து வங்கி கணக்கில் 2 கோடி இருப்பும் வைத்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகும் நபர். யாருக்கு என்ன உதவி என்றாலும் உடனே களத்திற்ல் இறங்கி தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொடுப்பார்.

சரத்குமார், அருண் பாண்டியன், மன்சூர் அலிகான் போல திரையில் பல புதிய நடிகர்களை அறிமுகம் செய்து வளர்த்துவிட்டவர். பல புதிய தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை உருவாக்கியவர் விஜயகாந்த். திரையுலகினருக்கு மட்டுமல்ல. பொதுமக்களுக்கும் பிடித்தவராக விஜயகாந்த் இருந்தார்.

அதனால்தான் அவர் மறைந்தபோது எல்லோரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியனை சகாப்தம் என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். 2015ம் வருடம் இப்படம் வெளியானது. அதன்பின் மதுர வீரன் என்கிற படம் வந்தது. விஜயகாந்துக்கு இருந்த வரவேற்பு சண்முக பாண்டியனுக்கு இல்லை.

எனவே, விஜய் போன்ற நடிகர்கள் அவரின் படத்தில் கேமியோ அல்லது சிறப்பு வேடத்தில் நடித்து கொடுக்கலாம். ஏனெனில் செந்தூரபாண்டி படத்தில் விஜய்க்கு அப்படித்தான் விஜயகாந்த் உதவி செய்தார் என பலரும் சொன்னார்கள். ஆனால், விஜய் அதை செய்யவில்லை. விஜயகாந்த மறைந்தபோது ‘சண்முகபாண்டியன் படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் கண்டிப்பாக நான் நடிப்பேன். இது கேப்டனுக்கு நான் செய்யும் மரியாதை’ என ராகவா லாரன்ஸ் சொன்னார்.

இதைத்தொடர்ந்து படைத்தலைவன் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு என கேமியோ வேடத்தை உருவாக்கினார்கள். ராகவா லாரன்ஸ் வரும் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்கள். ராகவா லாரன்ஸோ இப்போது வரை கால்ஷீட் கொடுக்கவில்லை. அதற்கு காரணம் இப்போது பென்ஸ் என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். அதோடு மாற்றம் என்கிற பெயரில் பல உதவிகளையும் செய்து வருகிறார். அதில் பிசியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

லாரன்ஸுக்காக காத்திருக்கிறது படைத்தலைவன் படகுழு..

Next Story