பொதுவாக நடிகர்களிடையே நிலவிவரும் ஒரு பேச்சு, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான். இதேபோல் நடிகைகளிடம் அடுத்த சிம்ரன் யார் என்பதுதான் பேச்சாக இருந்தது ஒருகாலத்தில். சிம்ரனுக்குப் பின் அந்த இடத்தை ஜோதிகாவும் அதன்பின் தற்போது அந்த இடத்தை நயன்தாராவும் நிரப்பிவிட்டார்கள்.
90களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவின் ராணியாக, இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்தார் நடிகை சிம்ரன். அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடியாக பல படங்களில் நடித்தார் சிம்ரன்.
குறிப்பாக அஜித்துடன் இவர் நடித்த வாலி, விஜய்யுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் 200 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. ரஜினியுடன் மட்டும் நடிக்காதது இவருக்கு பெரும் குறையாக இருந்தது. அதையும் ‘பேட்ட’ படத்தில் நடித்து சரிசெய்தார்.
மாடர்ன் கேர்ள், குடும்பப் பாங்கான வேடம் என எது கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தும் இவருக்கு. இதனாலே ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப்போனது. தமிழ் தவிர இவர் மலையாளம், கன்னடா, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
மிகவும் பிஸியான நடித்துவந்த இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்னர் இவர் நடன மாஸ்டர் ராஜ சுந்தரத்தை விரட்டி விரட்டி காதலித்ததாக சினிமா செய்திகளை பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
ராஜ சுந்தரம் வேண்டாம் என மறுத்தபோதும், சிம்ரன் அதை கண்டுகொள்ளாமல் அவரை விரட்டி விரட்டி காதல் செய்தார். அவருடன் இணைந்து ‘ஐ லவ் யூ டா’ என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற செய்தி பரவியது. இதனால்தான் சிம்ரன் தனது மார்க்கெட்டை இழந்தார் என ரங்கநாதன் கூறியுள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…