முஷாரப்புக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பர்வேஷ் முஷாரப் 2007ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக இருந்த போது அந்நாட்டின் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலைலை அறிவித்தார். இதன் காரணமாக அவர் மீது 2014ம் ஆண்டு தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை கடந்த 5 வருடமாக நடந்து வந்தது.

2016ம் ஆண்டு அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். தற்போது உடல் நலம் குன்றியுள்ள அவர் துபாய் நாட்டில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இது பர்வேஷ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
adminram