அரண்மனை 3 படம் இத்தனை கோடியா? - சிறப்பா கல்லா காட்டிய சுந்தர் சி....

by adminram |

2e43934c6a190ada1650d06211c6ce1c

சுந்தர் சி. இயக்கிய அரண்மனை திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றியை பெற அரண்மனை 2 உருவாகி அதுவும் வெற்றிபெற்றது. முதல் பாகத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், மனோபாலா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 2ம் பாகத்தில் ஹன்சிகா, த்ரிஷா, சித்தார்த், சூரி, கோவை சரளா, ராதாரவி உள்ளிட்ட பலரும் நநடித்திருந்தனர்.

569a1f8d96ec51142372eb190093afe6

தற்போது அரண்மனை 3ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதோடு சரி. அதன்பின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8e93e864be5de58acc17fd7aadb61625

இந்நிலையில், இப்படத்தை தமிழக தியேட்டர்களின் வெளியிடும் வினியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ரூ.23 கோடி விலை பேசப்பட்டு வியாபாரம் நடந்துள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் ஹிந்தி உரிமை ரூ.10 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இன்னும் சேட்டிலைட் உரிமை என சில வியாபாரங்கள் உள்ளது. இதிலும், பல கோடிகள் கிடைக்கும். இப்படத்தை சுந்தர் சியின் மனைவி குஷ்புவே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story