மூடநம்பிக்கையால் குழந்தையை மண்ணில் புதைத்த பெற்றோர் : அதிர்ச்சி புகைப்படம்

2019ம் வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நீடித்தது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் பொதுமக்களால் இதை காண முடிந்தது.

இந்நிலையில்,  சென்னை மெரினா கடற்கரையில் அறக்கட்டளையின் சார்பாக மக்கள் சூரிய கிரகத்தை நேரடியாக காண்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சூரிய கண்ணாடிகளையும் பயாஸ்கோப் மூலமாகவும் மக்களுக்கு சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எனவே, பொதுமக்கள் பலரும் அங்கு குவிந்து சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுராக்கி பகுதியில் சிலர் தங்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளை தலை மட்டும் வெளியே தெரியும் படிவிட்டு விட்டு உடலை மண்ணில் புதைத்தனர். சூர்யகிரகணத்தின் போது இப்படி செய்தால் இது நோயை குணப்படுத்தும் என நம்பியே அவர்கள் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

Published by
adminram