Cinema News
இந்தியன் 2 தியேட்டர்கள் குறையும்!.. என் படத்தோட கலெக்ஷன் என்ன தெரியுமா?.. பார்த்திபன் அதிரடி!..
இந்தியன் 2 படம் ஃபிளாப் ஆகிடுச்சா இல்லையான்னு எனக்குத் தெரியாது. என்னை பொறுத்தவரையில் என் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வரவேண்டும். இதுவரை டீன்ஸ் திரைப்படம் 10 பைசா கூட வசூல் செய்யவில்லை. டிஜிட்டல் உரிமம், ஓடிடி உரிமம் என எதுவும் விற்பனையாகவில்லை.
ஆனால், நான் தில்லா தைரியமா, ஆண்மையுடன் இந்தியன் 2 படத்துக்கு எதிராக என் படத்தை வெளியிட்டு இருக்கிறேன். பெரிய ஹைப்பான படங்கள் எல்லாம் சில நாட்களில் கூட்டம் குறைய ஆரம்பிக்க, தியேட்டர்கள் அந்த படங்களுக்கு குறையும் போது, என் படத்துக்கு அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் தான் படத்தை வெளியிட்டேன் என பார்த்திபன் 2ம் நாள் தியேட்டருக்குச் சென்று ஆடியன்ஸ் மத்தியில் படம் பார்த்த போது கிடைத்த வரவேற்பை பகிர்ந்து கொண்டார்.
விமர்சகர்கள் விமர்சனம் செய்கிறேன் என்கிற பெயரில் தவறான விஷயங்களையும் படத்தில் இல்லாத விஷயங்களையும் சொல்லக் கூடாது. பீரியட்ஸ் நேரத்தில் பெண்களை பேய் பிடித்து விடும் என்றும் எங்கேயும் டிராவல் செய்யக் கூடாது என்கிற மூட நம்பிக்கைகள் இன்றும் இருக்கிறது.
எத்தனை பெரியார்கள் வந்தாலும், இவர்களை திருத்த முடியாது என்பது போலத்தான் இருக்கிறது. என்னுடைய படத்தில் பேய், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறேன். இந்த படம் எக்ஸ்பீரிமெண்ட் படம் இல்லை. குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்க்கக் கூடிய படம் தான்.
எந்தவொரு டபுள் மீனிங்கும் மோசமான காட்சிகளும் இல்லாமல் சிறுவர்களுக்கான படமாகத்தான் இதனை இயக்கியுள்ளேன். 40 வருடங்களாக ஊழல் இன்னும் மாறாமல் நிறைய ஊறிப் போய் இருப்பதால் தான் இந்தியன் 2 படம் இப்போதும் வரத் தேவையாக உள்ளது.
இந்தியன் 2 படத்தை பாருங்கள், அதன் பின்னர், என்னோட படத்தையும் வந்து பாருங்கள். இந்த 13 பசங்களுக்கும் நிச்சயம் நல்ல எதிர்காலம் அமையும் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். அவர்களின் வாழ்க்கையை தப்பான விமர்சனங்கள் கொடுத்து கெடுத்து விடாதீர்கள் என பார்த்திபன் பேசியுள்ளார்.