பார்த்திபனின் அடுத்த வித்யாசமான முயற்சி – ஒரே ஷாட்டில் ஒரு படம் !

பார்த்திபன் அடுத்ததாக உருவாக்க இருக்கும் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் படம்பிடிக்க பட இருக்கிறது.

ஒரே நபர் நடித்து, தயாரித்து, இயக்கி ஒத்த செருப்பு என்ற படத்தை உருவாக்கினார் பார்த்திபன். வித்தியாசமான முயற்சியான இந்த படம் ரசிகர்களின் கவனத்த ஈர்த்த நிலையில் இப்போது தனது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகியுள்ளார்.

அடுத்ததாக பார்த்திபன், இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இந்த படத்தின் முக்கியமான அம்சமாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. அதனால் இப்போதே அந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Published by
adminram