
இயக்குனர் ஸ்ரீகணேஷூக்கு மீம் போடுவதில் அதிக ஆர்வம் உண்டு. எனவே,தனக்காக ஒரு மீமை உருவாக்கும் படி பிரியா பவானி சங்கர் செல்லமாய் மிரட்டினாராம்.
இதையடுத்து, ஒரு மீமை உருவாக்கி ஸ்ரீ கணேஷ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘மாபியா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அதை பாஷா பட காட்சிகளுடன் ஒப்பிட்டு அந்த மீம்ஸை அவர் உருவாக்கியுள்ளார்.

அதோடு ‘எனக்கும் ஒரு மீம் பண்ணுங்க என்று எங்கள் ஹீரோயின் ப்ரியாபவானிசங்கர் மிரட்டி கேட்டார். அவருடைய Mafia' திரைப்படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.





