தமிழகத்தில் கொரோனா பீதி அதிகரித்துள்ள நிலையில் கோழியால் அது பரவுவதாக் எழுந்த வதந்தியால் கோழிக்கறி விலை குறைந்துள்ளது.
கொரொனாவோ வேறு எந்த வொரு மர்ம நோயாக இருந்தாலும் உடனடியாக விலைக் குறைவது கோழிக்கறிதான். கோழிகளின் மூலம் கொரோனா பரவுவதாக வதந்திகள் பரவியதை அடுத்து கோழிக்கறியின் விலைக் குறைந்து கிலோ 10 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தது.
ஆனாலும் மக்கள் கோழிக்கறி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கறி விற்பனையாளர்களும் அசைவ உணவு ஹோட்டல்காரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோழியால் கொரோனா வைரஸ் பரவாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொதுமக்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி விநியோகிக்கப்பட்டது. இதனை மக்கள் கூட்டமாக வந்து போட்டி போட்டு வாங்கி சென்று சாப்பிட்டனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…