More

ஆன்லைனில் ரெம்டேசிவிர் விற்பனை உண்மையா? – மக்கள் ஏமாற வேண்டாம்!..

உலகம் முழுவதும் தற்போது கொரோனா 2வது அலை வீசி வருகிறது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

Advertising
Advertising

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டேசிவிர் மருந்து உதவுவதாக ஒரு இமேஜ் எழுந்தது. இதையடுத்து, பலரும் இம்மருந்தை வாங்க அலை மோதினார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இம்மருந்து விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று இம்மருந்தை வாங்கினர். அதன்பின் ரெம்டே சிவிர் மருந்தை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

அங்கும் அந்த மருந்தை வாங்க கூட்டம் அலை மோதியது. பலரும் ஒரே இடத்தில் குவிந்ததால் கொரோனா பரவுவதற்கு அரசே வழிவகுப்பதாக சர்ச்சை எழுந்தது. எனவே, அங்கு ரெம்டேசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம், ரெம்டேசிவிர் மருந்தால் பெரிய பலன் கிடையாது என உலக சுகாதார மையத்தின் அதிகாரி ஒருவரே கூறினார். ஆனாலும், இம்மருந்தை வாங்கி பலரும் அலைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைனில் ரெம்டேசிவிர் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. சில போலியான இணையதளங்கள் மக்களிடம் ஏமாற்றி பணம் பறிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டேசிவிர் மருந்து கிடைக்கும். பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts