மக்கள் குடிக்கிறார்கள்… அதற்கு அரசு என்ன செய்ய முடியும் – அமைச்சரின் பொறுப்பற்ற பதில் !

c3caf8c8746e4d01bd912dff6bf08dd4

தமிழக பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் மக்கள் குடிப்பதால அரசுக்கு வருவாய் அதிகமாக வருகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மீதான விவாதக் கூட்டம் இன்று சட்டசபையில் நடந்தது. அதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ’டாஸ்மாக் மூலமாக 30,000 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக சொல்கிறார்கள். இது நல்லதல்ல. அரசு மதுமூலம் வருவாயை நம்பி உள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அதிமுக அமைச்சர் தங்கமணி ‘அதிமுக அரசு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனக் கூறியது. அதேபோல டாஸ்மாக் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மதுவிலை உயர்வால்தான் வருமானம் அதிகமாகிறது. மதுக்கடைகளை திறப்பதால் அல்ல. மக்கள் குடிக்கிறார்கள். அதனால்தான் மது விற்பனையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு அரசு என்ன செய்ய முடியும்?’ என பதில் கேள்வி எழுப்பினார்.

Categories Uncategorized

Leave a Comment