காமத்தைத் தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் – பிரபல ஊடகவியலாளர் கருத்து !

Published on: January 9, 2020
---Advertisement---

233d2491a22e071d597bde156531d8b8

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பனிமலர் பன்னீர் செல்வம் தனக்கு வரும் பின்னூட்டங்களைப் பற்றி பேசியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் மாடலாகவும் செயல்பட்டு வருபவர் பனிமலர் பன்னீர் செல்வம். பெரியாரியவாதியான இவர் திமுக சார்பு நிலைப்பாடு கொண்டவர். அதனால் பாஜகவினரையும், நாம் தமிழர் கட்சியை விமர்சனம் செய்து வருபவர்.

ஆனால் அவரது விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ளாமல் அவரைத் தரக்குறைவாக பேசியும் ஆபாசமாக சித்தரித்தும் பல கமெண்ட்கள் வருவதுண்டு. அதைப்பற்றி குறிப்பிட்டுள்ள அவர் ‘காமத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் சங்கிகளும், தம்பிகளும்’ எனக் குறிப்பிட்டு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டார்.

இப்போது அந்த பதிவுக்கு கீழும் பலர் ஆபாசமாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment