சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து வருகிறது. இந்த படம் நான்கு நாட்களில் ரூபாய் 150 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்னும் ஒரு வாரம் விடுமுறை காலம் இருப்பதால் இந்த படம் விடுமுறை முடிவதற்கு 300 கோடி ரூபாய் வசூலை எடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 200 கோடி என்ற அளவில் 100 கோடி ரூபாய் லாபம் கிடைக்கலாம் என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன
இந்த நிலையில் இந்த படத்தை எப்படியாவது தோல்வி படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு அரசியல் கட்சி தலைவரும் ஒரு பிரபல தயாரிப்பாளரும் இணைந்து தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் திருட்டு சிடியை லோக்கல் கேபிள் டிவி கே டிவிகாரர்களுக்கு வழங்கி ஒளிபரப்பு செய்வது, வேண்டுமென்றே தர்பார் படம் ஓடும் தியேட்டர்களில் மொத்தமாக டிக்கெட்டை வாங்கி பாதி விலைக்கு விற்பனை செய்வது, படத்திற்கு தங்கள் ஆட்களையே அனுப்பி படம் முடிந்து வெளியே வரும்போது வேண்டுமென்றே மோசமான படம் என்று கேமிரா முன்னிலையில் நெகட்டிவ்வாக பேச வைப்பது போன்ற வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது
இவ்வளவு திட்டம் போட்டும் 'தர்பார்’ படத்தின் வசூல் சிறிது கூட பெறவில்லை என்பதும் அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் புகழை கெடுக்க சொந்த காசை செலவிடும் வில்லன்கள் போல் இவர்கள் செலவு செய்து வருவதாகவும் ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…