சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய ரஜினி ‘பெரியார் இந்து கடவுள்களுக்கு எதிராக விமர்சித்து பேசினார். அதை யாருமே எழுதவில்லை. ஆனால், சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார். இதனால், துக்ளக் பத்திரிக்கை நாடு முழுவதும் பிரபலம் ஆனது’ எனப்பேசினார்.
இதைத் தொடர்ந்து பெரியார் பற்றி சரியாக தெரியாமல், வரலாற்றை ரஜினி தவறாக பேசியதாக திராவிட விடுதலை கழகம் மற்றும் பெரியார் திராவிட கழகம் போன்ற சில அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுபற்றி ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை ரஜினியின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து ரஜினியின் வீட்டிற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது வீட்டிற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது:
1971ம் ஆண்டு சேலத்தில் ஊர்வலத்தில் நடந்த சம்பவம் பற்றி நான் கேள்விப்பட்டதையும் பத்திரிக்கையில் வந்ததையும் வைத்து பேசினேன். ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் செருப்புமாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி அவுட்லுக் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. அதைக்கண்டுதான் நான் பேசினேன். எனவே, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…