இயக்குனர் மணிரத்னம் தற்போது பலரும் தொட தயங்கிய மற்றும் எடுக்க முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் தயாரித்து வருகிறது.
பாகுபலியை போல் இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, அமலாபால் என பெரிய நடிகர், நடிகையர் பட்டாளமே நடித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வந்தது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசம் மாநிலம் ஒரிசாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு குதிரை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, இயக்குனர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில விலங்களுகள் நல வாரியம் மற்றும் ஹைதராபாத் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விசாரிக்க வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, அந்த விபத்து பற்றி வீடியோ அல்லது புகைப்படத்தை அளித்தால் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என பீட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…