மாஸ் லுக்கில் விஜய் சேதுபதி - வைரலாகும் புகைப்படம்

by adminram |

6f37ce5bfc18431ff037fd1722a0d923-1

தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் சாதாரணமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்தவர் அல்ல. பெரிய நடிகர், நடிகைகளின் வாரிசுகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க தனது திறமையாலும், முயற்சியாலும் முன்னேறி வந்தவர்.

சினிமா மீது இருந்த ஆசையில் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிப்பு கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்று தெரிய விஜய் சேதுபதிக்கு ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எதையும் அசாதாரணமாக எண்ணாமல் அத்தனை வாய்ப்பையும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
கொரோனா ஊரடங்கின் போது நரைத்த முடி, தாடியோடு அவர் இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், தற்போது அழகான தோற்றத்திற்கு விஜய் சேதுபதி மாறியுள்ளார். தனது புகைப்படத்தை தனது செல்போனில் அவரே செல்பி எடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியது.

Next Story