">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனாவில் இறந்த மருத்துவர் ; உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் : சென்னையில் அதிர்ச்சி
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனரான 55 வயது மருத்துவருக்கு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு வேறு சில வியாதிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
எனவே, ஆம்புலனஸில் அவரின் உடலை ஏற்றி அண்ணாநகர் பகுதியில் உள்ள வேளாங்காடு கல்லறையில் அவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். ஆனால், அவரது உடலை இங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி அப்பகுதிமக்கள் சுமார் 20 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். எனவே, ஆம்புலன்ஸில் இருந்த இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அதன்பின் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடலை அடக்கம் செய்தனர். மேலும், பல்வேறு வழக்குகளின் கீழ் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்துள்ளனர்.
கொரோனாவுக்கு பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்களே கடவுளாக கருதப்பட்டு வருகின்றனர். ஆனால், மருத்துவரின் உடலை புதைக்க சரியான விழிப்புணர்வு இன்றி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.