விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துடன் மோதும் இரு பிரபலங்களின் படங்கள்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் விநியோகிஸ்தர்களிடமும் ஏப்ரல் 9ஆம் தேதி தான் இந்த படத்தின் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 

இந்த நிலையில் அதே தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படமும் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த தேதியை கணக்கில் கொண்டே ’சூரரைப்போற்று படக்குழுவினர் தொழில்நுட்ப பணியை விரைவாக செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது சமீபத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்து இரண்டுமே வெற்றி பெற்று வருவதால் ‘மாஸ்டர்’ மற்றும் ’சூரரைப்போற்று’ திரைப்படங்கள் வெளியானால் இரண்டும் வெற்றி பெறும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் திடீரென இப்படத்தில் சசிகுமார் நடித்த ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படமும் ரிலீசாக இருப்பதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். விஜய் படத்துடன் சூர்யா மற்றும் சசிகுமார் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களின் மோதுவதால் போதுமான தியேட்டர்கள் மூன்று படங்களுக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Published by
adminram