திருமண கோலத்தில் பிக்பாஸ் ஷெரின் – வைரலாகும் புகைப்படங்கள் !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான ஷெரின் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்ட் வந்து காணாமல் போனவர் நடிகை ஷெரின். எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த அவரி பிக்பாஸ் சீசன் 3 க்கு அழைத்து வந்து மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் பிக்பாஸ்.

நிகழ்ச்சியில் பல ரசிகர்களின் மனதை வென்ற ஷெரின் அடுத்த ரௌண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரைப் பற்றிய அரவத்தையே காணவில்லை, இந்நிலையில் அவர் திருமணக் கோலத்தில் கையில் பூச்செண்டோடு நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவருக்கு திருமணமா ? மணமகன் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Published by
adminram