சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் மீண்டும் நடிப்பதாகவும் தனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சன் பிக்சர்ஸ் மற்றும் சிறுத்தை சிவா ஆகியவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விஸ்வநாத் என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
’வெளுத்து வாங்கு’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ‘தோனி’, ‘தடையற தாக்க’, ‘அட்டக்கத்தி’, ‘கபாலி’, ஸ்கெட்ச்’ சண்டக்கோழி 2’ போன்ற படங்களில் நடித்த நடிகர் விஸ்வநாத். கடந்த ஆண்டு வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமி கணவராக நடித்த கேரக்டரும், கபாலி படத்தில் ஜெய் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகர் விஸ்வநாத் தற்போது ’தலைவர் 168’என்ற படத்திலும் இணைந்து உள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் மீண்டும் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதிலும் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே தான் ரஜினியுடன் இணைந்து நடித்ததை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் ‘தலைவர் 168’ படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். டி.இமான் இசையில் இந்த படம் வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
1937ம் வருடம்…
லோகேஷ் கனகராஜ்…
பிக்பாஸ் வீட்டில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் டிவியிலிருந்து…