இதவிட்டா வேற வழியில்ல!... மாற்றி மாற்றி பேசும் மீராமிதுன்... போலீசார் எடுத்த அதிரடி முடிவு....

by adminram |

04dc9649ad77459fe050a3b68fcfd566

தலித் சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள்தான் என்னை அதிகம் காப்பி அடிக்கின்றனர். அவர்களை திரையுலகில் இருந்தே துரத்த வேண்டும் என்று அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் கேரளாவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

36bc1ea5421703d72ce4884e19b358f0

கேரளாவில் கைது செய்யப்படுவதற்கு முன்பு ‘போலீசார் என் மீது கை வைத்தால் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று யுடியூப்பில் வீடியோ வெளியிட்டார். அதேபோல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும், கத்திக்கொண்டே இருந்துள்ளார். மேலும், நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது என் கையை போலீசார் உடைத்துவிட்டனர். 24 மணிநேரம் எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என்றெல்லாம் கத்தினார். நீதிபதி முன்பும் இதேபோல் நடந்துள்ளார்.

08d85c6342df7b4f086de115b6f0f6d3

எனவே, அவரை காவலில் எடுத்து விசாரித்தாலும் குற்றத்திலிருந்து தப்பிக்க அவர் மாற்றி மாற்றி பேசுவார் என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தரமாட்டார் என்கிற எண்ணம் போலீசாருக்கு வந்துள்ளது. எனவே, மனநல ஆலோசகரை வைத்து அவரை பரிசோதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மன அழுத்தம் காரணமாக இப்படி நடந்து கொள்கிறாரா என்பதை பரிசோதுத்து, மனநல ஆலோசகர் முன்னிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்,.

Next Story