சிவகார்த்திகேயன் ‘டான்’ படக்குழு மீது வழக்குப்பதிவு - எதற்காக தெரியுமா?....

by adminram |

e9d945b491cf945aae13651dd0020b32-2

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் டான். இப்படத்தில் பிரியாங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவை, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆனால், எல்லைப்பகுதிகளில் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக புகார் எழுந்ததால், இயக்குனர் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.19,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story