செல்பி எடுத்து கொண்டே கார் ஓட்டிய பிரபல நடிகைக்கு போலீஸ் விதித்த அபராதம்

Published on: February 4, 2020
---Advertisement---

2968c46978865c3be5dca193fb2269fd

பிரபல தெலுங்கு நடிகையும், தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி செல்பி எடுத்துக் கொண்டேன் கார் ஓட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடிகை சஞ்சனா கல்ராணி தனது நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போதே செல்பி எடுத்துக் கொண்டு, ‘தான் மகேஷ்பாபு  படத்தைப் பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் அந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் தன்னுடைய பேவரைட் நடிகர் மகேஷ்பாபு என்றும் கூறிக் கொண்டே அந்த செல்பி எடுத்தார். ஒரு கையில் ஸ்டேரிங் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு எடுத்த இந்த இந்த செல்பி வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்யப்பட்டது 

இந்த வீடியோ குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிஸியான சாலையில் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது செல்பி எடுப்பது சட்டப்படி குற்றம் என பலர் அறிவுறுத்தினர். இந்த வீடியோவை பார்த்த போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்து சஞ்சனாவுக்கு ரூ.1,100 அபராதம் விதித்ததுடன் மீண்டும் இதுமாதிரி தவறை செய்யக்கூடாது என எச்சரித்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Comment