அமெரிக்காவில் உள்ள மினியபோலிஸ் பகுதியில் கருப்பின நபர் ஒருவரை போலிஸார் கொடூரமாக கொலை செய்த நிலையில் கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மினியபோலிஸ் சந்திப்பில் குற்றவழக்கு ஒன்றில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினர் ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் போலிஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை என சொல்லி, அவரை சாலையில் வைத்து கொடூரமாக துன்புறுத்தினர். மேலும் அவரைப் படுக்கவைத்து முழங்காலால் அவரது தொண்டையில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வைத்து அழுத்தி அவர் இறக்கும் வரை காலை எடுக்கவில்லை. அப்போது பிளாய்டு ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னைக் கொல்லாதீர்கள்’ எனக் கூறிக்கொண்டே இறக்கிறார். இது சம்மந்தமான வீடியோ வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த நிறவெறி கொலைக்கு எதிராக அமெரிக்காவின் பல இடங்களில் கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் ஒரு கட்டமாக மினியபோலிஸ் காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு தீ வைத்தனர். இந்த போராட்டங்களால் பல இடங்களில் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் நின்று ‘எங்களால் மூச்சு விடமுடியவில்லை’ என கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்கள் உலகம் முழுக்க கவனம் ஈர்த்துள்ளனர்.
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…